CommentGang

எச்சரிக்கை! இந்தியா IN PROBLEM? | Madan Gowri | MG Squad 🖖🏻

by Madan Gowri · Jun 8, 2026 · watch on YouTube ↗

Sort: top newest oldest
@priyaghoshal1965 · ▲ 3 · Jun 8, 2026
மக்கள் தொகை குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் உணவுமுறை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தரமற்ற தின்பண்டங்கள் தான், பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவை ஹார்மோன்களை சீர்குலைத்து விடுகிறது, இந்திய அரசு இதை கண்டிக்காமல் இருப்பது இது திட்டமிட்டு வேண்டுமென்றே நடத்துவது போல் இருக்கிறது. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றினால் மட்டும் தான் அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக இருக்க முடியும்.இன்று பெண்களுக்கு pcod போன்ற பிரச்சனைகள் வருவதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது.
Edit: மக்கள் தொகை குறைந்து வருவது நல்லது தான் என்றாலும்,ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் இந்த சமூகம் அவர்களை நிம்மதியாக வாழ விடுகிறதா?பெண்களை கேள்விகள் கேட்டு கேட்டு மனவருத்தம் அடைய வைக்கிறார்கள்,அவர்களுக்கு வரும் வருமானத்தில் பெருமளவு fertility centre இல் செலவு செய்ய செய்து அவர்களுக்கு குழந்தைக்கான ஏக்கங்களை உருவாக்கி விடுகிறார்கள் . ஆசைக்காக குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக , சமூகத்தின் கேள்விகளிலிருந்து தப்புவதற்காக குழந்தைகள் பெற்று கொள்கின்றனர்.