இதே மாதிரி சம்பவம் எனக்கும் நடந்துருக்கு... என் ஊரு திருச்சி தாண்டி மதுரை போற வழியில இருக்கு... எங்களுக்கு ஒரு 1.5ஏக்கர்ல ஒரு தரிசு காடு இருக்கு... அங்க பக்கத்துல வீடு எதுவுமே இல்ல... அந்த காட்டுல ஒறே ஒரு நெல்லிக்காய் மரம் இருக்கு. ஒருநாள் சாயங்காலம் காலேஜ் முடிச்சி வீட்டுக்கு வந்ததும் போய் நெல்லிக்காய் பறிக்க அந்த காட்டுக்கு போனேன். அங்க மரத்துல ஏறி நெல்லிக்காய் பறிச்சுட்டு இருக்கும் போது சர்ர்ர்ர்னு பிளேட் மாறி மரத்துக்கு மேல போச்சி... என்னதான் அப்போ எனக்கு 20+ வயசுனாலும் இத பாத்து டக்குனு பயந்து மரத்துல இருந்து கீழ விழுந்துட்டேன்... கையெல்லாம் சரியான வலி... அப்றம் எங்க அம்மா வந்து என் கையில தைலம் தடவி விட்டாங்க... "திரும்பி கட்டுல படுத்தா இந்த மாதிரி கனவு கண்டு மறுபடியும் கீழ விழுவ...ஒழுங்கா நீ கீழயே படுனு எங்க அம்மா சொல்லிட்டாங்க " .... 😢