தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் காமராசர் போன்ற தலைவர்கள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் இந்த சட்ட சபை அநாகரிகங்கள் மனதிற்கு வேதனையை தருகிறது. உதயநிதி தம்பி ஏன்பா இப்படி நடந்துக்கரீங்க. அரசியல் பாரம்பரியம் அரசியல் நாகரீகம் கொஞ்சம் கூட இல்லை. விஜய் தம்பி நீங்களும் அரசியலுக்கு புதிது. தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் புரியும். நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தனியாக தள்ளி வையுங்கள். ஊழல் ஆரமிப்பதே இந்த இலவசங்கள் தான். இதில் இருந்து தான் துவங்குகிறது. தமிழ்நாடு நலனுக்காக இந்த பணத்தை செலவழியுங்கள். மக்களுக்கு தெரியும் திமுக கஜானாவை காலிபண்ணிபன்னியது. வெள்ளறிக்கை வெளியிட்டு இலவசத்தை நிப்பாட்டுங்கள். எல்லோருக்கும் இலவச மருத்துவம் ,இலவச கல்வி சாலைகளின் தரம் ,கனிம வளங்களின் பாதுகாப்பு தண்ணீர் பாதுகாப்பும் சேமிப்பு, காவல் துறை ஒழுங்கு ,சட்டம் ஏழை பணக்காரன் என்று இல்லாமல் சமமாக செயல் படுவது. என இவைகளுக்கு வரி பணம், கோவில் வருமானம், அரசாங்க சொத்துக்களின் வருமானம் அனைத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்.